ஜநா தாண்டி மைத்திரியிடம் முறைப்பாடு வாசிக்கும் கூட்டமைப்பு?


சர்வதேச சமூகத்திடம் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் குரல் எழுப்புவதாக தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போது இலங்கை ஜனாதிபதியிடம் சான்று சமர்ப்பிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் முல்லைத்தீவில் தற்போது சிங்கள குடியேற்றவாசிகளிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்று எனக்கு கூறியபோதும் அங்கே அவ்வாறு அனுமதிப் பத்திரம் வழங்கியமை ஆதாரபூர்வமாக ஆவணத்துடன் கூட்டமைப்பினரால்; சமர்ப்பிக்கப்பட்டுள்ளத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்றைய வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த செயலணியின் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்களை விடுவிக்குமாறு கோரி மக்கள் மேற்கொள்ளும் போராட்டம் பற்றி சுட்டிக்காட்டப்பட்டது.குறித்த ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலம் விடுவிக்கப்படும் என ஏற்கனவே ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதும் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.

கடந்த கூட்டத்தின் பின்னர் எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை. மாறாக திணைக்களங்களின் பெயரில் நில அபகரிப்புத் தொடர்வதே பதிவு செய்யப்படுகின்றது. நில ஆக்கிரமிப்பு இடம்பெறும் நிலையில் தமிழர்களிற்கு வழங்கிய நிலத்தை மகாவலி என்னும் பெயரில் பெரும்பான்மை இன மக்களிற்கு வழங்கியதாக நாம் கடந்த கூட்டத்திலேயே கூறியபோது அதன் அதிகார சபை ஜனாதிபதியிடமே அவ்வாறு வழங்கவில்லை. என மறுத்துரைத்தனர். ஆனால் அவர்களால் வழங்கிய அனுமதிப்பத்திரம் கைவசம் உள்ளதாக கான்பித்து இவற்றிற்கு ஜனாதிபதி தீர்வை முன்வைக்க வேண்டுமெனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவற்றிற்குப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் முல்லைத்தீவில் தமிழர்களிற்கு முன்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலமும் தற்போது அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்றபோதும் குறித்த ஆவணம் மூலம் வழங்கியமை உறுதியாகின்றது. எனவே மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர் குறித்த அதிகார சபை மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மாவட்ச் செயலாளர் தலமையில் கூடு உடனடியாக இதுதொடர்பில் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றார்.

இதனை தொடர்ந்து அது கால இழுத்தடிப்பென கூட்டமைப்பினர் கருத்து தெரிவிக்க அது பற்றி பதிலளிக்காது அடுத்த விடயங்களை ஆராயலாமென மைத்திரி கடந்து சென்றிருந்ததாக சொல்லப்படுகின்றது.

No comments