வவுனியா சுற்றுலா: 12 பேருக்கே நேரமிருந்ததாம்!


வவுனியா எல்லைக்கிராமங்களிற்கான சுற்றுப்பயணத்தை தமது சபையின் ஆயுட்காலத்தின் இறுதி பயணமாக இன்று கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர்.தவறாது தமது பயணத்தினை படம்பிடிக்க அரச செலவில் வாகனமொன்றையும் ஏற்பாடு செய்து புகைப்படவியலாளர்களையும் அழைத்து செல்ல குழு தவறிவில்லை.

வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது வனவள திணைக்களம் தடுத்துவருவதாக முறைப்பாடு செய்து வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் அழைப்புவிடுத்திருந்தனர்.அதனை தொடர்ந்தே அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு குறித்த கிராமங்களுக்கு நேரில் சென்றுள்ளது.

அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் மாகாணசபை உறுப்பினர்கள் 12 பேர் கொண்ட குழு குறித்த கிராமங்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமைநேரில் சென்றிருந்தது.

இதேவேளை தமிழர் பிரதேசங்களில் உள்ள எல்லாம் காடுகளும் தமக்கும் தான் சொந்தம் என்ற அடிப்படையில் சகல காணிகளையும் வன  இலாகாவினர் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர். 

தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது  தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மாகாண சபைக்கு இருக்கிறதென அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் சபையில் தெரிவித்து இன்றைய சுற்றுப்பயணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் , 38 வடமாகாண சபை உறுப்பினர்களில் 12 பேரே அக்கிராமங்களுக்கு இன்றைய சுற்றுலாவின் சென்றிருந்தனர்.

No comments