மீண்டும் தொடங்கியது விசாரணைகள்?


கொழும்பு ஆட்சி மாற்றத்தின் பின்னராக மீண்டும் இலங்கை காவல்துறை உற்சாகமடைந்துள்ள நிலையில் யாழ்.பல்கலையில் நடைபெற்ற தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வல்வெட்டித்துறையில் மாவீரர் தின நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் யாழ்.பல்கலைகழக மாணவர்களால் தமிழமுதம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நிதி பின்னணி பற்றி விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் என பலரும் நிதியுதவி செய்ததாகவும் அதன் ஊடாக மாணவர்களுக்கு பெருந்தொகை பணம் கிடைக்க பெற்று உள்ளதாவும் அதனால் நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பிலும், எவ்வளவு நிதியுதவி கிடைத்தது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே குறித்த நிகழ்வின் மூலம் 15 இலட்சம் வரை கடன் உள்ளதாக தெரிவித்துள்ள மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் இதன் மூலமாவது கடன் பற்றி வெளியே தெரியவரட்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

No comments