செயலணி வேண்டாம்:வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி!


இலங்கை அரசின் வடகிழக்கு செயலணியை புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கை கூட்டமைப்பின் தலைமையினை இலக்கு வைத்து அழுத்தங்கள் உச்சம் பெற்றுள்ளன.

இலங்கை ஜனாதிபதியோ டிசெம்பர் 31ம் திகதியினுள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் காணிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஆனால் படையினரோ ஒரு அங்குலத்தினை தானும் விட்டு நகர தயாராக இல்லையென்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 71 வீதமான நிலப்பரப்புக்கள் படையினர் மற்றும் திணைக்களத்தின் பிடியிலேயே இருப்பதனாலேயே மாவட்டத்தின் எந்த அபிவிருத்தியினையும் மேற்கொள்ள முடியவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி .சாந்தி சிறீஸ்காந்தராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் அரச காணியில் 3984.2 ஏக்கர் இராணுவத்திடமும் 309 ஏக்கர் கடற்படையினர் வசமும் உள்ளதோடு 1.5 ஏக்கர் நிலம் விமானப்படை வசம் உள்ளது. அதேபோன்று தனியார் நிலத்தில் 155 ஏக்கர் நிலம் இராணுவத்திடமும் 408 ஏக்கர் கடற்படையினர் வசமுள்ளதாகவே மாவட்டச் செயலகம் தரவு சொல்கின்றது.

ஆனால் வட்டுவாகல் கடற்படைத் தளம் , அம்பகாம்ம் விமாணப்படைத் தளம் , புலுமச்சிநாதகுளம் இராணுவ முகாம் முருகண்டி இராணுவமுகாம் ஒட்டுசுட்டான் இராணுவமுகாம். புதுக்குடியிருப்பு இராணுவ முகாம் நிலங்கள் தொடர்பில் இங்கே தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. , இந்தப் பகுதியில் மிக மோசமாக மக்களின் வாழ்வாதாரத்திற்கான நீர்ப்பாசணக் குளங்களில் 8 குளங்களும் , ஓர் சுடலையும் கையப்படுத்தப்பட்டுள்ளது.

இதிலே அம்பகாமத்தில் எமது மக்களின் வயல் நிலங்கள் 3 ஆயிரம் ஏக்கர் உள்ளது. அதேபோல் புலுமச்சிநாதகுளம் பகுதியில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் வயல் நிலம் உள்ளதோடு இதில் சில வாழ்விடமும் உள்ளது. அதேபோன்று முருகண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்விடங்கள் வீடுகளுடன் பிடிக்கப்பட்டுள்ளதோடு வாழ்வாதாரக் குளம் இரண்டையும் படையினர் அபகரித்துள்ளனர்.

இவ்வாறு மக்களின் வாழ்வாதார நிலத்தை படையினர் வகைதொகையின்றி கையப்படுத்தியுள்ள நிலையில் படையினர் இவ்வாறு என்றால் வனவளத் திணைக்களமும் வனஜீவராசிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றோடு மகாவலி அதிகார சபை இன்னுமோர் புறமாக உள்ளது. நாயாறு , வட்டுவாகல் போன்ற கடல் வளம் உள்ள பிரதேசத்தில் 6 ஆயிரம் ஏக்கரிற்கும் சொந்தமான நிலத்தை வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தகமாணி மூலம் அபகரிக்க 1990முதல் இடம்பெயர்ந்த மக்கள் 2010க்கும் பின்பும் தற்போது இந்தியாவில் இருந்தும் திரும்பும்போது அவர்களிடம் அனுமதிப்பத்திரம் உள்ள நிலத்த்தில் காடு வளர்ந்து விட்டதாம் என வனவளத் திணைக்களம் பிடித்து விட்டது.

கொக்குளாய் , கொக்குத்தொடுவாய் , நாயாறு என நீண்ட பட்டியல் தற்போது இந்த மாவட்டச் செயலகம் உள்ள பிரதேசம்கூட தங்களிற்குச் சொந்தமானவை என வர்த்தகமாணி வெளியிட்டுள்ளனர். ஆனால் இவை இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளிற்கோ அல்லது மாவட்ட நிர்வாக அதிகாரிகளிற்கோ தெரியப்படுத்தப்படவில்லை. அவ்வாறு எமது ஒப்புதல் இன்றி வர்த்தகமானியை பிரசுரித்தமைக்கு என்ன நடவடிக்கை. இவற்றினை நாம் நீண்டகாலமாக கோரிவருகின்றோம்.

இவற்றினை விட தேராவில் பண்ணை , விசுவமடுப் பண்ணை , இரண்டும் சிவில் பாதுகாப்பு படைகள் வசம் உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 76 வீதமான நிலம் இன்று இவர்களின் பிடியிலேயே உள்ள நிலையில் இந்த மாவட்டம் எவ்வாறு முன்னேறுவது. விவசாயிகளின் விவசாயக் குளங்கள் இன்றும் வனவளத் திணைக்களத்தின் பிடியிலேயே உள்ளது. இவற்றினையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது வன்னி மாவட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதும் பிரயோசனமற்ற ஜனாதிபதி அபிவிருத்தி குழுவை புறக்கணித்து எதிர்ப்பினை வெளிப்படுத்த தலைமையினை கோரியுள்ளனர்.

குறி;ப்பாக சாந்தி சிறீஸ்கந்தராஜா,சிவமோகன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்கள் இதனை வலியுறுத்தி வருவதாகவும் தலைமை உரிய எதிர்ப்பினை வெளிப்படுத்தாவிட்டால் தாங்கள் தனித்து எதிர்ப்பினை வெளிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

No comments