மன்னார் கடல் தாரை வார்ப்பு?

மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வரும் டீ.ஜீ.பி எனும் ஆய்வுக்கப்பல் மன்னார் கடற்பரப்பை அடைந்துள்ளது. குறித்த கப்பல் இந்தப் பகுதிகளில் முழுமையான ஆய்வினை மேற்கொள்ள முன்று வாரங்கள் ஆகும்.
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் மூலமாக இந்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைய மன்னார், காவேரி மற்றும் லங்கா ஆகிய மூன்று கடற்பகுதிகளில் இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மன்னார் எம்-01 தொடக்கம் எம்-10, காவேரி சீ-1 தொடக்கம் சீ-5, லங்கா ஜே-எஸ்-01 தொடக்கம் ஜே-எஸ் 06 ஆகிய வலயங்கலாக பிரிக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எரிவாயு மற்றும் எரிபொருள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் டோடல் என்ற நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.
மேலும் தற்போது ஸ்டலம்பர் என்ற நிறுவனத்துடனும் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய எமக்கு எரிபொருள் ஆய்வு தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments