மாவையின் மாய்மாலம் மக்களிற்கு தெரியும்:முதலமைச்சர்!


தலைவர்களின் மாய்மாலப் பேச்சுக்களையும் பொய் வாக்குறுதிகளையும் அவர்கள் இலகுவில் அடையாளம் காணப்பழகிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் சிலரின் சாதி ரீதியான சிந்தனைகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளார்கள். அத்துடன் தலைவர்களுக்கு எதிராகக்கேள்விகளைக் கேட்பதற்கும் அவர்களின் செயற்பாடுகள் குறித்து விமர்சிப்பதற்கும் இளைஞர்கள் குழாம் தயாராகிவிட்டதாக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

மாவை சேனாதிராசா முதலமைச்சராக தன்னை தெரிவு செய்தமை பற்றிய கருத்திற்கு பதிலளிக்கையிலேயே மாய்மாலப்பேச்சுக்களை மக்கள் நம்ப தயாராக இல்லையென தெரிவித்துள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் சமூக மேம்பாட்டிற்கும் அரசியல் முன்னெடுப்புக்களுக்கும் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. விரைந்து தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய திறன், அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய சக்தி, பலம் ஆகியவை இளைஞர்களிடையே காணப்படுகின்றனவெனவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

சுpல காலங்களுக்கு முன்னர் வரை அரசியல் என்பது ஒரு குறித்த வகுதியினருக்கானது எனவும் ஏனைய மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதுடன் அவர்களின் அரசியல் பணிமுடிவடைந்துவிட்டது என்ற கோட்பாட்டிலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று ஒரு சிறுபிள்ளைக்குக்கூட அரசியல் பற்றி தெரிந்திருக்கின்றது. தலைவர்களின் மாய்மாலப் பேச்சுக்களையும் பொய் வாக்குறுதிகளையும் அவர்கள் இலகுவில் அடையாளம் காணப்பழகிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் சிலரின் சாதி ரீதியான சிந்தனைகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளார்கள். அத்துடன் தலைவர்களுக்கு எதிராகக்கேள்விகளைக் கேட்பதற்கும் அவர்களின் செயற்பாடுகள் குறித்து விமர்சிப்பதற்கும் இளைஞர்கள் குழாம் தயாராகிவிட்டது. 

சென்ற வாரம் பல்கலைக்கழகமாணவர்கள் என்னைச் சந்தித்து கேள்விமேல் கேள்விகளைக் கேட்டார்கள். நானும் உற்சாகத்துடன் அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். ஆகவே இந்த நிலையில் அரசியல் அனுபவத்தைக் கொண்ட முதிர்ந்த அரசியல் தலைவர்கள் எமது இளைய சமூதாயத்திற்கு வழிகாட்டிகளாக இருந்து அவர்களையும் அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டு முன்னேறவேண்டும் என்பதே எனது விருப்பமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments