விவசாய காணிகளை ஆக்கிரமித்துள்ள வனவள திணைக்களம்

கிளிநொச்சி ஜெயபுரம் மக்களுக்குச்சொந்தமான வயல் காணிகளை துப்பரவு செய்து பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கு இதுவரை வனவளத்திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என்றும் இதனால் தாங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜெயபும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதிகளில் 1983ம் ஆண்டு காலப்பகுதியில இலங்கையின் மலையகப் பகுதியலிருந்தும் ஏனைய பாககங்களிலிருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் ஜெயபுரம் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
1990ம் ஆண்டுகளுக்கு பிற்பகுதயில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தப்பகுதிகளில் வாழந்த மக்கள் இந்தியாவின் தமிழகத்திற்கும் இறுதியுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் யுத்தம் வரைக்கும் இடம்பெயர்ந்து சென்றனர்.
இதன் பின்னர் 2010ம் ஆண்டு இந்தப்பகுதி மக்கள் தமது சொந்த நிலத்தில் குடியேறியபோதும், ஏற்கனவே தமக்கு வழங்கப்பட்டு பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு 548 ஏக்கர் வயல் நிலங்களும் தற்போது வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது என்றும் இதனை விடுவித்து தருமாறும் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு வயல் நிலங்களை நம்பியே இநதப்பகுதிகளில் தாங்கள் குடியேறியதாகவும் கடந்த பத்து ஆண்டுகளாக தங்களுடைய காணிகளில் பயிர் செய்ய முடியாத நிலை காணப்படுவதனால் பெரும் கஸ்ரங்களை அனுபவிப்பதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் ஜெயபுரம் வடக்கு கமக்கார அமைப்பின் தலைவர் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில் இந்த காணி விடுவிப்பது தொடர்பாக மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் நடைபெற்ற பல கலந்துரையாடல்களில் நாங்கள் எங்களது கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றோம்.
இதைவிட தற்போதும் கூட ஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சித்தலைவர் அமைச்சர் மனோகணேசன் .பிரதி அமைச்சர் அங்கயன் இராமநாதன், எனப்பலருக்கு பல கடிதகஙகளை அனுப்பியிருந்தபோதும், இதுவரை எந்தவிதமான பதில்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலரை தொடர்பு கொண்டு வினாவியபோது ஏற்கனவே நில அளவை செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதையடுத்து, இந்த வயல் காணிகளை அந்த மக்களுக்கு கடந்த ஆண்டு யூலை மாதம் 18ம்திகதி பூநகரிப்பிரதேச பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அந்த மக்களுக்கு வழங்குவதாக தீர்மானம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 2017 ம் ஆண்டு நவம்பர மாதம் மாவட்டச்செயலகத்தினால் ஒரு மில்லியன் ரூபா நிதியும் டிசம்பர் மாதம் 12ம் திகதி ஒரு மில்லின் ரூபா நிதியும் விடுவிக்கப்பட்டு துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வனவளத்திணைக்களத்தினால் குறித்த காணியின் துப்பரவுப்பணிகள் நிறுத்தப்பட்டன.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பக்களுக்கு அறிவித்திருக்கின்றோம் ஆனால் இதுவரை குறித்த திணைக்களத்திடம் இருந்து குறித்த காணி விடுவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments