நல்லாட்சியில்! உள் ஒன்று: உலகிற்கு ஒன்று?


வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் ஒன்றிற்கு ஒன்று  முரணான தகவல்களை தெரிவித்து சர்வதேச பிரதிநிதிகளின் காதில் பூவைத்துள்ளார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

கொழும்பு ஊடக செயற்பாட்டு வெளிப்படுத்துகையின் 20வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்  வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் விசாரணைகளினை முன்னெடுக்க ஏதுவாக நாடாளுமன்றில் சட்டமூலமொன்றை கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார்.அதனை அங்கு பிரச்சன்னமாகியிருந்த சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில் ஆங்கிலத்தில் பேசிய ரணில் பின் சிங்களத்தில் பேசுகையில் காவல்துறை இதனை பற்றி அக்கறையற்றிருப்பதாகவும் 2015 தான் ஆட்சி கதிரையேறிய பின்னர் கொலைகள் நடந்ததாவெனவும் கேள்வி எழுப்பி ஊடகங்களை கண்டபடி போட்டுத்தாக்கியிருந்தார்.

இந்த அரசு சர்வதேசத்திற்கு ஒரு முகத்தையும் உள்ளுர் இன்னொரு முகத்தையும் காண்பிப்பது அப்படமாக தெரிவதாக சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.  

No comments