மீள்குடியேற்ற நிதியை துண்டித்துள்ள நல்லாட்சி?


யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் பணிக்கு 2016-2017ம் ஆண்டுகளில் ஒதுக்கிய நிதியின் 5 வீத நிதியே 2018ம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யாழில் 2006ற்கு பின் இடம்பெயர்ந்தோர் முழுமையாக மீள் குடியேற்றப்பட்டு விட்டனர். இதேநேரம் எமக்கு சவாலாக உள்ள விடயமானது 1990ற்கு முன்பு இடம்பயர்ந்தவர்களின் விடயம்தான். ஏனெனில் தற்போதுதான இவர்களின் நிலம் விடுவிக்கப்படுகின்றது. இவர்களின் நிலம் தற்போது 4 ஆயிரம் ஏக்கர் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு 2016-2017ல் ஓரளவு நிதி கிடைத்தது. தற்போது இதுவரை 250 மில்லியன் மட்டுமே கிடைத்தது. ஆனால் முன்பு 6 ஆயிரத்து 500 மில்லியன் கிடைத்தது. இது 5 சத வீதம் மட்டுமே ஆகும்.

இதேநேரம் 2015ல் 33 ஆயிரம் வீடுகள் தேவை எனக் கண்டறிந்தோம். இருப்பினும் 6 ஆயிரம் வீடுகளே கிடைத்தது. இன்னமும் 27 ஆயிரம் வீடுகள் தேவை. 90ற்கு முன்பு இடம்பெயர்ந்தவர்களின் நிலம் விடுவிக்கும்போது வெறும் காடாகவே கானப்படுகின்றது. வீடு , மலசலகூடம் , வீதி , பாடசாலை என அனைத்துமே தேவையாகவுள்ளது.

இந்த நிலையில் இதுவரை 1500 குடும்பங்கள் இந்தியாவில் இருந்து திரும்பியுள்ளனர். அவர்களின் தேவையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ளோரில் இன்னமும் 15 ஆயிரம் பேர் இந்தியாவில் உள்ளனர். வந்தவர்களின் தேவை பூர்த்தி செய்தால் மட்டுமே எஞ்சியோர் வருவதற்கு முன்வருவார்கள். வீடுகளிற்கு அப்பால் திருத்தம் செய்யவும் நிதி உதவி தேவையாகவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் வரையில் படையினர் வசம் உள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் புனர்வாழ்வுப் போராளிகளிற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதன் பிரகாரம் எமது மாவட்டத்தில் 2 ஆயிரத்து 900 போராளிகள் உள்ளனர். இதில் 90 பேரே முன்னாள் போராளிகள் பணியாற்றுகின்றனர். எனவே இதனால் குறித்த நிதியை பெருமளவு பயன்படுத்த முடியும். இதனால் நடைமுறைக்கு சாத்தியமற்றுவிட்டதென அவர் தெரிவித்துள்ளார்.

No comments