முடங்கியது மட்டக்களப்பு?


மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக பிரிவில் உள்ள வளம் செறிந்த புல்லுமலை ஊரில் குடிநீரை நிலத்தடியில் இருந்து உறுஞ்சி போத்தல்களில் அடைத்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபார நோக்கில் காத்தான்குடி தவிசாளரால் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலையை மூடுமாறு கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியநிலையில் இன்று  வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கிய நிர்வாக முடக்க போராட்டம் நடத்த மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்த போராட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும் தார்மீக ஆதரவை தெரிவித்திருந்தனர் . கதவடைப்பு நிர்வாக முடக்கம் போராட்டம் பூரண வெற்றி அடைந்துள்ளது.

மட்டுநகர் படுவான்கரைபெருநிலம் எழுவான்கரை பகுதிகள் யாவும் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

ஏறாவூர் பகுதியில் சில பேரூந்து சேவை காலையில் இடம்பெற்ற போதும் வீதிகளில் சிலர் தீயிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர் இதனால் பேருந்து சேவைகளும் முற்றாக நிறுத்தப்பட்டன.

படுவான்கரை பெருநிலப்பகுதி பாடசாலை மாணவர்கள் எவரும் எந்த பாடசாலைகளுக்கும் செல்லவில்லை.

சகல வர்தசங்கங்களும் பூரண ஆதரவை வழங்கியது திணைக்களங்களில் அன்றாட பணிகள் நடைபெற பொதுமக்கள் எவரும் செல்லவில்லை.

வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை நோயாளர் நலன் கருதி இயங்கியபோதும் வரவு குறைவாகவே காணப்பட்டது.

No comments