ஜனாதிபதித் தேர்தலில் ஞானசார தேரர் ?


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் போட்டியிடவுள்ளார் எனக் கூறப்படுகிறது. நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், அவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்க 2 முக்கிய அமைச்சர்கள் முயற்சித்து வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது, ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்த அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளனர். அதன் பின்னர் ஞானசார தேரர் அல்லது பொதுபல சேனாவிலிருந்து வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கிடைக்கக்கூடிய சிங்கள பௌத்த வாக்குகளை பிளவுபடுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த திட்டத்திற்கு ஞானசார தேரர் இதுவரையில் இணக்கம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொது மன்னிப்பு வழங்கப்பட்ட எந்தவொரு பிரஜையும் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும், அதற்கு தடை கிடையாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட சிரேஸ்ட விரிவுரையாளா பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா, எஸ்.பி.திஸாநாயக்க போன்றவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பின்னர் தேர்தலில் போட்டியிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments