பிணையில் விடுவிக்க பின்னடிக்கும் காவல்துறை?


வவுனியா கனகராயன்குளம் ‘தாவுத்’ உணவு நிலைய உரிமையாளர் மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளாகிய முன்னாள் போராளியை விடுவிக்க பின்னடிப்பதாக சொல்லப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலையில் கைக்கும், காலுக்கும் விலங்கிடப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கெ.வசந்தகுமார் நேற்றுமுன்தினம் (14) நீதிமன்றத்தினால் மூன்று பேரின் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும் சிறைச்சாலை அதிகாரிகள் தனது கணவரை விடுதலை செய்யவில்லை என குறித்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து தாக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் தமிழ் மொழி மூலம் முறைப்பாட்டு பிரிவுக்கு எனது கணவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்து அதற்கான ரசீத்தையும் வழங்கியுள்ளது என முறையிட்டபோதும் நீதிமன்றத்தின் உத்தரவானது நேரடியாக பொலிசாருக்கு வழங்கப்படவில்லை அதன்காரணமாக குறித்த நபரை விடுதலை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமையே எனது கணவரை விடுதலை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். முன்னாள் போராளியின் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற ‘தாவுத்’ உணவக உரிமையாளருக்கு ஆதரவாக செயற்பட்ட கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ; வசந்தகுமாரின் குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டதாகவே பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

No comments