பேப்பர்களை கிழிப்பது எமது வேலையல்ல:மாவை!


மானிப்பாய் தொகுதியில் தமிழரசுக்கட்சி மற்றும் த.வி.கூ கட்சிகளில் தொடர்ந்து 05 தேர்தல்களில் வெற்றிபெற்று 23 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராகப்பதவிவகித்தவரும், தற்போதைய யாழ்.மாவட்ட எம்பியான சித்தார்த்தனின் தகப்பனாருமான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோரின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 1985இல் டெலோ அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட விசுவநாத உடையார் தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம்; ஆகியோரின்  33ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தலில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வன்முறையைத்தூண்டுகிறாரென தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரர் வி.தர்மலிங்கம் மற்றும் அமரர் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரது 33 ஆவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் யாழ்ப்பாணம் –பிற்பகலில் இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு nதிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,சுமந்திரன் சொன்ன கருத்து பத்திரிகைகளில் முழுமையான சொற்பதத்தை வெளிப்படுத்தாமல் சமஸ்டியை கைவிட்டுவிட்டதாக விவாதம் நடக்கிறது.

மாகாண சபையில் அஸ்மின் முதலமைச்சருக்கு எதிராக சில வார்த்தைகளை பாவிக்கும்போது,விடுதலைப்புலிகள் பாணியில் முதலமைச்சர் அகற்றப்படவேண்டும் என்று அவர் சொன்னார்.அவர் நீதியரசர் அல்ல.சட்டத்தரணியும் அல்ல. அவர் சொன்னதைச் சரியென்று சொல்லவில்லை.ஆனால், எங்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் அது மட்டுமல்ல ஒரு நீதியரசர் அவர். சட்டத்துறையில் ஆற்றல் கொண்டவர் என்றுதான்  அவரை நினைத்தோம்.ஆனால், விடுதலைப்புலிகள் பாணியில் சுமந்திரன் அகற்றப்படவேண்டும் என்று அவர் சொல்கின்றார்.

முதலமைச்சர் வன்முறையைத்தூண்டுகிறார்.சுமந்திரன் அந்த வார்த்தையை பேசவில்லை. முதலமைச்சர் கேள்வி பதில் எழுதுகிறார். இப்போது ஒரு தீர்ப்பையும் எழுதியுள்ளார்.இது குற்றவியல் மிகுந்த கருத்து. மோசமான வன்முறை வார்த்தைகள்.பொறுப்பற்று வன்முறையைத் தூண்டுகின்ற வார்த்தைகள்.அவர் அவ்வாறு சொன்னது தவறு.பத்திரிகையை கிழித்துப் போடுவதெல்லாம் எமது தீர்மானம் அல்ல  என மாவை தெரிவித்துள்ளார்.

இதனிடையே இப்படுகொலையை அரங்கேற்றிய டெலோ தொடர்ந்தும் கூட்டமைப்பிலுள்ள போதும் அதன் பிரதிநிதிகள் எவரும் நிகழ்வினை எட்டிக்கூட பார்த்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments