மீண்டெழுந்தது முல்லைமண்: விரட்டப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள்!

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் புத்தர் சிலைவைக்க வந்த பிக்குகள் குழு பிரதேச இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு வாகனங்களில் தங்கியிருக்கும் ஏற்பாட்டுடன் வருகை தந்திருந்த புத்த பிக்குகள் இருவரும் சிங்களவர்களும் விரட்டப்பட்டுள்ளனர்.அவ்வாறு விரட்டப்பட்டவேளை தப்பி சென்றிருந்த இருவாகனங்கள் மக்களால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டதுடன் சிறைபிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையெடுக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன் இலங்கை காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மேலும் இரு வாகனங்கள் நெடுங்கேணி பக்கமாக தப்பிச்சென்றுள்ளனர்.

தமிழ் இராசதானியிருந்ததாக சொல்லப்படுகின்ற முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சந்தம் சந்தடியின்றி விகாரை அமைக்கவந்திருந்த வேளையிலேயே மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அங்கு வடமாகாண அமைச்சர் பவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

கொழும்பில் அரசிற்கு முண்டுகொடுத்துக்கொண்டு இங்கு வருகை தரவேண்டாமெனவும் அங்கிருந்து உடனடியாக வெளியேறவும் வலியுறுத்தி இளைஞர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.







No comments