பதுக்கி வைத்திருந்த வெடிபொருள் மீட்பு!

சட்டவிரோத மீன்பிடிக்கென வெடிமருந்தினை வீட்டில் வைத்திருந்ததற்காக வீட்டின் உரிமையாளரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் வெடிமருந்தினையும் மீட்டு பளை காவல்துறையிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளிக் கிழமை மருதங்கேணி தாளையடி பகுதியில் உள்ள வீடு ஒன் றில் வெடிமருந்து இருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய  தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது. 

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் வீட்டு முற்றத்தில் நின்ற வேப்ப மரத்திற்கு கீழே இருந்த பொதியினை சோதனையிட்ட போது அதற்குள் மூன்று கிலோ 200 கிராம் ரி.என்.ரி வெடி மருந்தும்,  மூன்று கிலோ 250 கிராம் சி4 வெடிமருந்தும் காணப்பட்டது. 

இதனையடுத்து வெடிமருந்தை மீட்ட விசேட அதிரடிப்படையினர் வீட்டாரான அதே இடத்தை சேர்ந்த 43 வயது நபரையும் கைது செய்து பளை காவல்துறையிடம் பாரப்படுத்தியுள்ளனர். 

தென்னிலங்கை மீனவர்கள் மேற்கொண்டுவரும் டைனமைட் வெடித்து மீன்பிடிக்கும் தொழில்முறைக்கு விற்பனை செய்ய இதனை பதுக்கி வைத்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

No comments