கடலில் தேடுதல்:அகப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்?


சட்டவிரோத கடலட்டை பிடிப்பு,சுருக்குவலை உட்பட்ட ஜந்துவகையான தொழிலுக்கான அனுமதி நிறுத்தப்படும் வரை கடற்றொழில் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக வடமராட்சி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டைத் தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை படகுகள் இன்று அதிகாலை வேளை உள்ளூர் மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது.மூன்று படகுகளும் எட்டு தென்னிலங்கை மீனவர்களும் தடை செய்யப்பட்ட இரவு வேளை தொழிலில் ஈடுபட்டிருந்த போது உள்ளுர் மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.

நேற்றிவு முதல் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டிருந்த தென்னிலங்கை மீனவர்களை தேடி வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்கள் கடலில் சோதனையிலீடுபட்டிருந்தனர்.

அவ்வாறு பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறை அவர்களை கையேற்று கொண்டு செல்ல முற்பட்டனர்.இதனால் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.பதற்றமான சூழல் தற்போதுவரை நீடிக்கின்றது.

No comments