பிரித்தானியாவில் ஐ.நா நோக்கிய ஈருறுளிப் பயணம் தொடர்பில் மக்கள் கலந்துரையாடல்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. நா. நோக்கி ஈருருளிப் பயணப் போராட்டத்துக்குரிய மக்கள்  கலந்துரையாடல் இன்று (05/08/2018 ஞாயிற்றுக்கிழமை) லண்டன் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் நடைபெற்றது.

ஈருருளிப் பயணத்திற்கான பாதை ஒழுங்காற்றல், அரசு, அரசுசார்பற்ற பிரதிநிதிகளோடான  சந்திப்புக்கள் என்று  பல விடையங்கள் கலந்தலோசிக்கப்படது. சில பொறுப்புக்களை மக்கள் எடுத்துக்கொண்டனர்.

ஈருருளிப் பயணம் 01/09/2018 அன்று 11.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக (Downing Street) ஆரம்ப நிகழ்வு நடைபெற்று 12மணிக்கு ஈருருளியில் மனிதநேய செயற்பாட்டாளர்கள் புறப்படுவார்கள். ஈருருளிப் பயணத்தை  தொடர  ஐரோப்பா நாடுகளில் இருந்தும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈருருளிப் பயணத்தில் பிரித்தானியக் கரை வரையோ அல்லது ஜெனிவா வரையோ பங்குபெற விரும்பும் மக்கள் எதிர் வரும் 15ம் திகதிக்கு முன்னர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம் – 02033719313  – 07496108923

லண்டன் வாழ் மக்கள் 01/09/2018 அன்று பிரதமர் அலுவலகத்துக்கு முன்பதான (Downing Street) ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஐ. நா. நோக்கி ஈருருளிப் பயணப் போராட்டத்தை பலப்படுத்துமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

இதனுடைய தொடர் சந்திப்பு வரும் 19/09/2018 அன்று மதியம் 1 மணிக்கு Thomas Wall Center, 52 Benhill Avenue, Sutton SM1 4DP  நடைபெறும்.


No comments