காணாமல் ஆக்கப்பட்ட ஜிம் பிறவுண் அடிகளார்!

ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப் போர் மூண்ட நாட்களில் நடந்த மிகப் பெரிய மனித உரிமை மீறல் ஒன்றாக அருட்தந்தை ஜிம்பிரவுண் அடிகளார் காணாமல் போகச் செய்யப்பட்டார் ஜிம் பிறவுண் அடிகளார்.
         
ஜிம் பிறவுண் அடிகளார் படுகொலை செய்யப்பட்டிருக்காலம்     


அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டிருந்த அருட்திரு ஜிம் பிறவுண் அடிகளார் தனது உதவியாளருடன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 20 2006 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போகச் செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு அல்லைப்பிட்டி சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணிக்கு அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும் தம்மிடம் உள்ளதாக பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தெரிவித்தனர். அதன்பின் அவர் பற்றிய தகவல்கள் தொடர்புடையவர்களுக்கு கிடைக்கவில்லை.


இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டபோதும் தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர். அவர்கள் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் பங்குத்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார். பங்குத்தந்தையுடன் சென்ற அவரது உதவியாளர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் பென்சன் பிளஸ் (வயது 39). அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர்.

 பலவித அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரௌன் நியமிக்கப்பட்டார்.

அவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு வத்திக்கான் வேண்டுகோள் விடுத்தது. பேராயர் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்துமாறு ஆம்னஸ்டி இன்டர்நஷனல் அமைப்பு கோரியது. அல்லைப்பிட்டிற்கு சென்ற சமயம் காணாமற்போன பங்குத் தந்தை ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் உடன் பதில் தரவேண்டுமென பாப்பரசரின் இலங்கைக்கான தூதுவர் பேராயர் மரியோ செனாறி வேண்டுகோள் விடுத்தார்.

 அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் பென்சன் பிளஸ் (வயது 39). அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாக சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர். சிறிலங்கா இராணுவத்தினரின் அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரௌன் நியமிக்கப்பட்டார்

                                        கத்தோலிக் குருமார் அச்சம்

 யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்ட பங்குத் தந்தை நிகால் ஜிம் பிறவுன் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா யாழ் கிறிஸ்தவ குருமார் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் தீவகம் அல்லைப்பிட்டி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கைதான 34 அகவையுடைய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரின் உதவியாளரான 38 அகவையுடைய வின்செண்ட் விமலன் ஆகியோர் விசாரணைக்கு எனக் கைதான பின் காணாமல் போயுள்ளர்.

இந்த நிலையில் மண் சாக்குமூடை ஒன்றில் வெட்டப்பட்ட நிலையில் பொதி செய்யப்பட்ட நிலையில் புங்குடுதீவு கடற்கரையில் கடந்த 14ம் நாள் மீட்கப்பட்ட சடலம் ஜிம் பிறவுண் அடிகளாருடையது என கத்தோலிக்க குருமார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சடலத்தின் குருதியை கொழும்புக்கு அனுப்பி மரபணு முறைக்கு உட்படுத்துமாறு யாழ் கிறிஸ்தவ குருமார் யாழ் நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

பன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையின் படி, பிறவுண் அடிகளும், உதவியாளர் விமலதாஸ் என்பவரும் விசையுந்து ஒன்றில் அல்லைப்பிட்டி நோக்கிப் பயணிக்கும் போது அவர்களின் நண்பர் ஒருவரை வழியில் சந்தித்து அவருடன் அல்லைப்பிட்டி கடற்படை சோதனைச் சாவடிக்குச் சென்றிருக்கின்றனர். பிற்பகல் 2.00 மணிக்கு அவர்கள் இருவரையும் சோதனைச் சாவடியில் விட்டு விட்டு நண்பர் சென்று விட்டார்.

 சோதனைச் சாவடியில் இருந்து அருட்தந்தைகள் இருவரும் விசையுந்தில் அல்லைப்பிட்டி நோக்கி சென்றதை சிலர் நேரில் கண்டுள்ளனர். அவர்களின் விசையுந்தின் பின்னால் சோதனைச் சாவடியில் இருந்து வேறு இரண்டு விசையுந்துகளில் ஒவ்வொன்றிலும் மூன்று ஆயுதம் தரித்தவர்கள் சென்றதையும் அவர்கள் கண்டுள்ளனர்.

இந்த ஆறு ஆயுததாரிகளும் அல்லைப்பிட்டியின் புனித மேரி தேவாலயத்தின் முன்னால் சிறிது நேரம் உரையாடி விட்டு மூவர் சோதனைச்சாவடியை நோக்கித் திரும்பி வந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சியாளர் மிண்டும் அல்லைப்பிட்டி சோதனைச் சாவடிக்குத் திரும்பியபோது அந்த மூன்று ஆயுததாரிகளும் இலங்கைக் கடற்படையினருடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவர் கவனித்தார்.

இந்நிகழ்வுக்குப் பின்னர் ஜிம் பிறவுண் அடிகளும் அமலதாசும் எங்கும் காணப்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு எங்கணும் உள்ள தேவாலயங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு தேடப்பட்டபோதும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இருவரும் கைது செய்யப்பட்டதை இலங்கைக் கடற்படையின் அதிகாரி அட்மிரல் உப்பாலி ரணவீர மறுத்துள்ளார். ஜிம் பிறவுணும் உதவியாளரும் மீண்டும் சோதனை சாவடிக்கு வந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றதாக சோதனைச் சாவடியில் இருந்த கடற்படையினர் தெரிவித்தனர்.

ஆனாலும், யாழ் நகருக்குள் இவரக்ள் இருவரும் வந்திருந்ததை யாப்பாணக் காவல்துறையினரால் உறுதிப் படுத்த முடியவில்லை புங்குடுதீவுக் கடற்கரையில் மிகவும் அழுகிய நிலையில் மனித உடல் ஒன்றிருந்த மணற்பை ஒன்று 2007, மார்ச் 14 ஆம் நாளன்று கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர்ப் பத்திரிகை தகவல் வெளியிட்டிருந்தது.


இவ்வுடல் ஜிம் பிறவுணுடையதென அடையாளம் காணப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்திருந்தது. ஆனாலும், இவ்வுடலின் மீது மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனைகள் இந்த உடல் ஜிம் பிறவுணுடையதோ அல்லது விமலதாசின் உடையதோ அல்ல என இலங்கை அரசு அறிவித்தது


இடம்பெயர்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு அல்லைப்பிட்டி , ஊர்காவற்துறைஎன்று ஓடி ஓடி உதவிக்கொண்டிருந்த அல்லைப்பிட்டி கத்தோலிக்க பங்குத்தந்தைவணக்கத்திற்குரிய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் ( வயது 34 ) எனும் நல் உள்ளத்தினையும்அல்லைப்பிட்டி சோதனை சாவடியில் வைத்து கடற்படையினரும் , ஈபிடிபியினரும் இணைந்துகடத்தி கொன்றதாக ஊடகங்கள் ஆதாரத்துடன் தகவல்கள் வெளியிட்டிருந்தன . 

சில நாட்களின் பின்னர் தலையற்ற முண்டமாக ஜிம் பிறவுண் அடிகளாரின் வித்துடல்கடற்கரையில் மீட்கப்பட்டிருந்தது . இப்படுகொலைகள் தொடர்பாக ஊர்காவற்துறை நீதிமன்றில்நீதிபதி சிறீநிதி நந்தசேகரன் ( இன்றைய மேல் நீதிமன்ற நீதிபதி ) விசாரணைகளைமுன்னெடுத்திருந்தபோதும் கடற்படை , ஈபிடிபியினரின் கொலை மிரட்டல்கள் காரணமாகபொதுமக்கள் சாட்சியமளிக்க முன்வரவில்லையென்று ஊடகங்கள் , பொதுமக்கள் தரப்பினர்குறிப்பிட்டிருந்தனர்

No comments