யாழ்.பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை நினைவேந்தல்!


செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவேந்தலில் மாணவர்கள்,கல்வி துறைசார் விரிவுயைராளர்கள்,பல்கலைக்கழக பணியாளர்களென பலரும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது ஆகஸ்ட் 14, 2006 அன்று இலங்கை விமானப்படையினர் திட்டமிட்ட துல்லியமான தாக்குதலில் 61 சிறுமிகளை கோரப் படுகொலை செய்த 12 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அன்றைய தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். 


2006ஆம் ஆண்டு காலை 6 மணிக்கு இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின. அத்தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன், 150 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். அப்போது இந்த சம்பவம் தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.


இதனிடையே புதுக்குடியிருப்பிலும் செஞ்சோலை நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments