மயிலிட்டியில் பாடசாலை விடுவிப்பு:மைத்திரியின் சலுகையாம்?


வலிகாமம் வடக்கில் மைத்திரி அரசு துண்டு துண்டாக பிய்த்தெடுத்து செய்துவரும் அரசியலில் அடுத்து இதுவரை விடுவிக்கப்படதிருக்கும் மயிலிட்டி மகா வித்தியாலத்தினை இன்னும் இரண்டு வாரங்களில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இன்று மயிலிட்டி துறைமுக அடிக்கல் நாட்டுவிழாவில்  இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பில் இராணுவத்தளபதியுடன் கலந்துரையாடி பாடசாலையை விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

உரிமை கோரிய எமது மக்களிற்கு சலுகை அரசியலை முன்னெடுக்க தெற்கு முற்படுவதாக அண்மைக்காலமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இதனிடையே வடக்கில் பொதுமக்களது காணிகளை விடுவிப்பதற்கு தற்போதைய அமைச்சரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments