பலாலிக்கு வருகிறது இந்திய அதிகாரிகள் குழு


பலாலி விமான நிலையத்துக்கு நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வருகை தரும் இந்திய அதிகாரிகள் மூவரும், விமான ஓடுபாதை மற்றும் விமான நிலைய அமைவிடம் என்பன தொடர்பில் ஆராய்ந்து பிற்பகலே கொழும்பு திரும்புவர் என விமானப் படைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக சீரமைக்க இலங்கை  இந்திய அரசுகளுக்கு இடைய இணக்கம் காணப்பட்டது. அத்துடன், பலாலியிலிருந்து தமிழகத்துக்கான விமான சேவையை ஆரம்பிக்கவும் இந்தியா இலங்கையிடம் விருப்பம் தெரிவித்தது. இந்த நிலையை பலாலி விமானத் தளத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க இந்தியா தயாராகி உள்ளது. அதனை யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர், கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பலாலி விமானத் தளத்தை நேரில் ஆராய இந்திய அதிகாரிகள் மூவர் நாளைபலாலிக்கு வருகை தருகின்றனர். இதேவேளை, 2016ஆம் ஆண்டும் இந்திய சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் பலாலிக்கு நேரில் வருகை தந்து ஆராய்ந்தனர். அதன்போது, தற்போதுள்ள நிலப்பரப்பை வைத்தே பிராந்திய நிலையம் அமைக்க முடியும் என்றும் மேலதிகமாக காணிகளை சுவீகரிக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

No comments