நீதிமன்று வெளியேற்ற உத்தரவு:மைத்திரி அரசு காணி உறுதி வழங்கியது?


முல்லைதீவு மாவட்டத்தின் நாயாறு கிராமத்திற்கு தெற்கேயான பகுதிகளில் சிங்கள குடியேற்றம் மேற்கொள்ள மகாவலி அதிகாரசபை மும்முரமாக களமிறங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் நாயாறு கிராமத்திற்கு தெற்கேயுள்ள கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைக்களுக்கான முனைப்புக்கள் மும்முரமாகியுள்ளன.

தமிழ் மக்கள் தனித்துவமான மரபுரிமையுடன் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இக்கிராமங்களில் இருந்து 1983 டிசம்பரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பகிரங்க அறிவித்தல் முலம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவர்கள் மீண்டும் இரண்டாயிரத்துப்பத்தாம் ஆண்டிலேயே மீள்குடிறே அனுமதிக்கப்பட்டனர். இம்மக்கள் இடம் பெயர்ந்திருந்த காலத்தில் இவர்களுக்கு சொந்தமான வயல் நிலங்கள் சிங்கள மக்களுக்கு மகாவலி அதிகாரசபையால் பிரித்து வழங்கப்பட்டதுடன் பாரம்பிய தமிழ்ப் பெயர்களில் அமைந்திருந்த இவ்வயல் நிலங்களின் பெயர்களும் சிங்களப் பெயர்களாக மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் தமிழ்மக்களின் பாரம்பரிய கரைவலைப்பாடுகள் அரசியல் செல்வாக்கு மிக்க தனவந்த .சிங்கள மீனவர்களால் அத்துமீறிக்கைப்பற்றப்பட்டுள்ளன. இக்கரைவலைப்பாடுகளில் கரைவலை  மீன்பிடியை மேற்கொண்டுவரும் சிங்கள மீனவர்கள் கடற்கரையில் அத்துமீறி அரசகாணியைப்பிடித்து சொகுசு பாங்காளாக்களும் அமைத்து வருகின்றனர். இதனால் தமிழ் மீனவர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

இவ் அரசகாணிகளை அத்துமீறிப்பிடித்து குடியேறிய றுக்மல் துசார லிவேரா, சலீனா மேரியன் தேதுனு டையஸ் ஆகியயோருக்கெதிராக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் அவர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். இதனடிப்படையில் நீதிமன்றம் இவ்விரு சிங்கள குடியேற்றவாசிகளையும் அத்துமீறிக்கைப்பற்றிய காணியிலிருந்து வெளிNறுமாறு கட்டளையிட்டது.

இவர்களிருவரும் இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்குத் தொடந்த போதிலும் இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் றுக்மல் திசார லிவோரா, தேதுனு டையஸ் ஆகியோர் வவுனியா உயர் நீதிமன்றில் முல்லைத்தீவு நீதிமன்றில் தீர்ப்பை மீள் பரீசிலனைக்குட்பட்டுத்தும் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் கருநாட்டுக்கேணி கிராமத்தில் மேற்படி சிங்கள மீனவர்களினால் அத்துமீறி கைப்பற்றப்பட்ட அரசகாணிகளுக்கு மகாவலி அதிகாரசபை காணி உத்தரவுப்பத்திரங்களை வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றம் இச்சிங்கள மீனவர்களை அத்துமீறிக்கைப்பற்றிய காணிக்களில் இருந்து வெளியேறுமாறு வழங்கிய கட்டளை வலுவில் இருக்கும் நிலையில் மகாவலி அதிகாரசபையால் இவர்களுக்கு இக்காணிகளில் குடியிருப்பதற்காக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை நாட்டின் சட்டம் ஒழுங்கை மகாவலி அதிகாரசபை எதேச்சாதிகாரம் மீறும் செயலாக அடையாளப்படுத்தப்;பட்டுள்ளது.

நாயாறு கிராமத்தில் சிங்கள மீனவர்களினால் தமிழ் மக்களின் வாடிகள் தீயிட்டெரிக்கப்பட்ட நிலையில் நாயாற்றில் இருந்து சில மைல்கள் தொலைவில் கருநாட்டுக்கேணியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டது இப்பிரதேச மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மகாவலி அதிகார சபையினர் தமிழ் மக்கள் வாழந்துவரும் கிராமங்களான கொக்குளாய், கொக்குத்தொடுவாய் முகத்துவாரப்பகுதிகள், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் மக்கள் குடியேறிய பகுதிகள், இதுவரை மீள்குடியேறாத தமிழ் மக்களின்; காணிகளை அளவீடு செய்து வருவதாகவும் இக்காணிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்படலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

No comments