இளைஞர் தூக்கில் தொங்கித் தற்கொலை! காதலி தற்கொலைக்கு முயற்ச்சி!

இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் வவுனியா செட்டிக்குளப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 24 வயதுடைய கிஷ்ணபிள்ளை தினேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.

தினேஷின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தினேஷ் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அறிந்த அவரது காதலி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments