கோத்தா உள்ளிட்ட ஏழ்வருக்கு விசேட நீதிமன்றில் வழக்கு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்‌ஷவின் தந்தையான, டீ.ஏ. ராஜபக்‌ஷவின் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதில், அரச நிதி முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில், விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

No comments