புலம்பெயர் தமிழர்கள்:கொழும்பு பாதுகாப்பு கூட்டத்தில் ஆய்வு!


விரைவில் கூடவுள்ள கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.இன்னொரு புறம் புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்யவேண்டுமென அழைப்பும் விடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் விரைவில் கூடவுள்ள கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளமை இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களது பணத்தை மட்டும் இலக்கு வைப்பது உறுதியாகியுள்ளது.

குறிப்பாக புலம்பெயர் தேசத்திலிருந்து வரும் தமிழர்களை சந்தேக கண்ணோடு பார்க்கும் பார்வையிலிருந்து இலங்கை அரசு தயாராக இல்லாதேயிருந்துவருகின்றது.

இதனிடையே இலங்கை அரசின் முகவர் அமைப்புக்கள் புலம்பெயர் தேசத்திலுள்ள பல அமைப்புக்களையும் உடைத்து அவர்களில் பலரையும் இலங்கைக்கு தருவித்துக்கொண்டிருக்கின்றன.அவ்வகையில் அண்மையில் கூட மஹிந்த ஆதரவு கும்பலொன்று வடக்கிற்கு வருகை தந்திருந்ததுடன் வடக்கு ஆளுநரையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments