யேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி

21.7.2018 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியினை யேர்மன் தமிழர்
விளையாட்டுக் கூட்டமைப்பு மிகச்சிறப்பாக நடாத்தியது.

தென்மாநிலத்தில் உள்ள 12 தமிழாலயங்களைச் சேர்ந்த 350 வீர வீராங்கணைகள் இவ் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினார்கள். ஆரம்ப நிகழ்வில் இருந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வீர வீராங்கணைகள் மிக ஆர்வத்துடன் தமிழீழத் தேசியக்கொடியின் கீழ் அணிதிரண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

கொட்டும் மழையில் அணிநடையாக அணிவகுத்துவந்த தமிழாலய மாணவ மாணவிகள்; தமிழீழத் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்திச் சென்ற காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

போட்டியிட்ட தமிழாலயங்களில் முதலாவது இடத்தை முன்சன் தமிழாலயமும், இரன்டாவது இடத்தை ரூட்லிங்கன் தமிழாலயமும், மூண்றாவது இடத்தை சின்டில்பிங்கன் தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.

No comments