வடக்கில் ஒன்று திரளும் பிக்குகள்!

வடக்கில் பௌத்த மயமாக்கலின் முக்கிய பரிமாணமாக வடக்கிலுள்ள பௌத்த பிக்குகள் இன்று கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.சர்ச்சைக்குரிய மரணதண்டனை தீர்ப்பு தொடர்பிலேயே இன்று அவர்கள் ஒன்றுகூடி கருத்துவெளியிட்டுள்ளனர்.

மரண தண்டனையை யாருக்கு வழங்க வேண்டுமெனக் குறிப்பிடும் எவருக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லையென்றும் இவ்வாறான கருத்துகளால், இனவாத, மதவாதப் பிரச்சினைகள் எழக்கூடுமென, வடக்கு மாகாண பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கருத்துகளால், கஸ்டப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட சமாதானம் உடைந்துவிடுமென்றும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா சிறீபோதி தக்சினாராம விகாரையில், இன்று (18) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வவுனியா, முல்லைத்தீவு மற்றும் வெலிஓயா போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள விகாரைகளின் விகாராதிபதிகள் கலந்துகொண்டே, மேற்கண்ட விடயம் தொடர்பில், கூட்டாகத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துரைத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பிரதான சங்கநாயக்கத் தேரரும் சிறீP போதி தக்சினாராம விகாரையின் விகாராதிபதியுமான சயம்பலாகஸ்வெவே விமலசார தேரர், மரண தண்டனை தொடர்பில் பலர் பலவாறு கருத்துத் தெரிவித்தாலும், அது தொடர்பான தீர்மானத்தை, நாட்டின் ஆட்சியாளர்களும் நீதித் துறையினருமே எடுக்க முடியுமென்று கூறியதோடு, தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் பகிரங்கமாகக் கருத்து வெளியிடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டுமென, அனைத்துத் தரப்பினரிடத்திலும் கேட்டுக்கொண்டார்.

அண்மையில், மேற்படி மரண தண்டனை குறித்து, ஊடகச் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட பௌத்த தேரர் ஒருவர், மரண தண்டனை அமுல்படுத்தப்படுமாயின், முதலாவதாக, அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு அந்தத் தண்டனையை வழங்கவேண்டுமெனக் கூறியதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட விமலசார தேரர், வடக்கின் தேரர்கள் என்ற ரீதியில், இக்கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.

இவ்வாறான கருத்துகளால், இனவாத, மதவாதப் பிரச்சினைகள் எழக்கூடுமெனக் குறிப்பிட்ட அவர், தூக்கிட்டுக் கொலை செய்யவேண்டுமெனக் கூறுவதற்கு, பௌத்த துறவிகளான எவராலும் கூறமுடியாதென்றும் இவ்வாறான கருத்தைக் கண்டிப்பதாகவும் கூறினார்.

No comments