விஜயகலா பெண் புலியாம் - மகிந்த கட்சி எம்.பி சாடல்


விஜயகலா மகேஸ்வரனை பெண் புலி என விமர்சித்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த சிங்களவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக பெண் புலி நினைத்துக்கொண்டிருக்கின்றார். அவர்கள் நினைப்பது போல நாங்கள் உறங்கிக்கொண்டிருப்போம் எனில் நாம் விழிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நாடு தற்போது சீர்குலைந்துவிட்டது. இனியாவது ஜனாதிபதி செயற்பாட்டு ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் கல்விதுறையை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தகைமையுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அரசியல் தொடர்புடையவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகின்றது.

பதவி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர், அதிபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சிங்களவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக விஜயகலா மகேஸ்வரன் போன்ற பெண் புலிகள் நினைத்துக்கொண்டிருக்கின்றார். அவர்கள் நினைப்பது போல நாங்கள் உறங்கிக்கொண்டிருப்போம் எனில் நாம் விழிக்கும் நேரம் வந்துவிட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments