விவாதம் தொடங்கியது, பிஜு ஜனதா தளம் வெளிநடப்பு

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வரப்படுகிறது. இதில் வாக்கெடுப்பு நடைபெறும்.
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக சில மாதங்கள் முன்பு வரை கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறது. அந்தத் தீர்மானத்தின் மீது இன்று (ஜூலை 20) மக்களைவையில் விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தொடங்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்த எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சி அமைத்த பின்னர் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீது நடத்தப்படும் வன்முறைகளை காரணமாக காட்டினர்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் காட்டிய எதிர்ப்புகளால் நாடாளுமன்றம் முடங்கியது. மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில், மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மல்லிகார்ஜூன கார்கேயும் முதலில் பேச உள்ளனர்.

No comments