இராணுவ விடயங்களில் சரத் பொன்சேகா மூக்கு நுளைக்கிறார்


சிறிலங்காவின் இராணுவ விவகாரங்களுக்குள், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மூக்கை நுழைக்கிறார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவே, இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தனக்குத் தெரியாமல் சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்குகிறார்.  இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் குறித்தும் பேசுகிறார் என்றும் சிறிலங்கா அதிபரிடம், இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

No comments