பலாலியில் விமான நிலையம்: ஈழத்தில் புதிய மாநிலம்!


பலாலியிலிருந்தான விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டால் சிங்கப்பூர், மலேசியா மத்திய கிழக்கு , ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் தமது விமானசேவையினை ஆரம்பிக்க தமது விருப்பத்தை இலங்கை அரசிடம் வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே பலாலியை பெருமளவு நிலத்தை கைப்பற்றி வைத்திருப்பதற்கு விமான நிலையத்துக்கான தேவை உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். 1958 இனக்கலவரம் நடை பெற்ற போது 110 பேர் பயணம் செய்யும் போய்ங் விமானத்தில் மக்களை ஏற்றி இறக்கினார்கள். இதனால் முன்பு இருந்த இடமே சர்வதேச விமான சேவைக்கு போதுமானது. இதை கனடா , இந்திய நிபுணர்கள் அண்மையில் உறுதிப்படுத்தி உள்ளார்கள். இப்போது பிரச்சினை அதுவல்ல வட பகுதி அபிவிருத்தி அடைவதை தென் இலங்கை அரசியலவாதிகள் விரும்பவில்லை அதே போல் அரசியல் தமிழ் வாதிகளும் தங்கள் குடும்பம் தமது வருமானம் என்ற குறுகிய சிந்தனையில் உள்ளார்கள். பூநகரி உள்ளிட்ட பல இடங்கள் விமான நிலையம் அமைக்க பொருத்தமாக இருக்க அதனை மீறி இன்று பல நூற்றுக் கணக்கான ஏக்கர் வலிகாமம் மண்ணில் விமானநிலையம் தேவையாவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக வானூர்திச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வானூர்தி நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளது. வானூர்திச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பிராந்திய வானூர்தி நிலையமாக பலாலியை தரமுயர்த்தும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும். இந்தப் பணிகளுக்காக மேலதிக காணிகள் எவையும் சுவீகரிக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய அரசு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இடையிலான முத்தரப்புச் சந்திப்பில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தநிலையில்  இந்திய நிதி உதவியில் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையை தொடங்கி வைப்பதற்காக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கும் யாழ்ப்பாணம் வந்தார். இரண்டு தரப்பினரையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த போது இவ்விடயம் பேசப்பட்டுள்ளது.

பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக தரம் உயர்த்துவதற்கு முதல்கட்டமாக தற்போது இருக்கின்ற நிலையிலேயே இந்தியாவுக்கு வானூர்தி சேவைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவையைத் தொடங்குவதற்கு உடனடியாக என்ன தேவைகள் உள்ளனவோ அவை பூர்த்தி செய்யப்படும்.

பன்னாட்டு வானூர்திகள் தரையிறங்குவதற்கும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்தற்கும் ஏதுவாக சமிஞ்ஞைக் குறியீடுகள் அமைக்கப்படவேண்டும். குடிவரவு மற்றும் குடியகல்வு, ஆயத்திணைக்களம் என்பனவற்றைச் செயற்படுத்துவதற்கு இப்போதுள்ள கட்டடங்கள் போதுமாவென்பதை ஆராயவேண்டும். இல்லாவிடின் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படவேண்டுமென்று சிவில் வானூர்திப் போக்குவரத்துச் சபையினர் சந்திப்பில் கூறியுள்ளனர். அவற்றை உடனடியாகச் செயற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக வருகைதந்து பலாலி வானூர்தி நிலையத்தைப் பார்வையிட்டு இந்தியாவுக்கான வானூர்திச் சேவைக்கான ஏனைய அடிப்படைத் தேவைகளை மதிப்பீடு செய்வார்கள். வானூர்திச் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பிராந்திய வானுர்தி நிலையமாக தரமுயர்த்தி ஏனைய நாடுகளுக்கான வானூர்தி சேவைகளும் நடத்தப்படவுள்ளது. 

தற்போதுள்ள வானுர்தி ஓடுதளத்துக்கு மேற்குப்புறமாக 500 ஏக்கர் காணியில் புதிய வானூர்தி நிலையத்துக்கான கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வு மாதாந்தம் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.

No comments