அனந்தி:துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை!

வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தனக்கு கைத்துப்பாக்கி வேண்டுமென கோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்த ஆவணத்தை சுமந்திரன் ஆதரவு வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் வெளியிடவுள்ளதாக தெரியவருகின்றது.


தனது விருப்பத்திற்குரிய தனிப்பட்ட செயலாளராக நியமித்திருந்த றிப்தி மொகமட் என்பவரது ஆலோசனையின் பேரில் பாதுகாப்பிற்கு கைத்துப்பாக்கி கோரி அனந்தி விண்ணப்பித்திருந்ததாக தெரியவருகின்றது.எனினும் குறித்த கோரிக்கை பிரகாரம் கைத்துப்பாக்கி வழங்கப்படவில்லையென தனக்கு நெருங்கிய மாதாந்த கொடுப்பனவு உதவி பெறுகின்ற ஊடகநிறுவனங்களை சேர்ந்த சிலரிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அனந்தி சசிதரனால் அடுத்த அமர்வில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணையை சபையில் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என அவைத்தலைவர், அமைச்சருக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

சபை உறுப்பினரான அயூப் அஸ்மீன் என்னிடம் கைத்துப்பாக்கி உள்ளது என சபையில் தெரிவித்தமை எனது சிறப்புரிமையை மீறும் செயல் என பிரேரணையை அடுத்த அமர்வில் முன் மொழிய உள்ளேன். அதனை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவருக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதி இருந்தார். 

குறித்த விடயத்தினை தீர்மானமாக நிறைவேற்ற சபையில் அனுமதிக்க மாட்டேன் எனவும் , ஆனாலும் குறித்த விடயம் தொடர்பில் சபையில் தன்னிலை விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் அளிப்பேன் எனவும் அவைத்தலைவர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

No comments