நெல்லியடியில் கரும்புலிகளிற்கு அஞ்சலி!


ஜீலை 5 கரும்புலி நாளான இன்று முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது.

கரும்புலி மில்லர் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த நெல்லியடி மண்ணில் இன்று மதியம் நனைவுகூரல் இடம்பெற்றிருந்தது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கரும்புலி மில்லரின் சகோதரி சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.


1987ம் ஆண்டின் இதே நாளன்று நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை படைகள் மீது விடுதலைப்புலிகளின் முதல் கரும்புலி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தாக்குதலை நடத்திய கரும்புலி மில்லர் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்ட நினைவுதூபி படைகளால் அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments