தீயிட்டு கொழுத்துவோம்: தென்னிலங்கை மீனவர்கள் சவால்!



வடமராட்சி கிழக்கில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டமொன்றிற்கு இன்று சனிக்கிழமை மக்கள் தயாராகியிருந்த நிலையில் அவசர அவசரமாக களமிறங்கிய எம்.ஏ.சுமந்திரனின் கால அவகாசம் கோரி அதனை முடக்கியுள்ளார்.

இதனிடையே தம்மை வெளியேற்ற முற்பட்டால் உள்ளுர் மீனவர்களையும் அவர்களிற்கு தலைமை தாங்கிவரும் கே.சிவாஜலிங்கம் உள்ளிட்ட அனைவரையும் தீயிட்டு எரிக்கப்போவதாக தென்னிலங்கை மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பரப்பில் நூற்றுக் கணக்கான கொட்டகைகளை அமைத்து வெளி மாவட்ட மீனவர்கள் அத்தமீறி கடலட்டை பிடித்துவருகின்றனர்.புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து அட்டைத் தொழிலை ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே குறித்த அட்டை வாடிகள் அகற்றப்பட வேண்டுமெனக் கோரியே இன்று கண்டண ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவசர அவசரமாக அங்கு வந்திருந்த எம்.ஏ.சுமந்திரன் நாளை தான் மீன்பிடி அமைச்சரை சந்திப்பதாகவும் தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுதி கூறியிருந்தார்.
இதனிடையே அதன் பின்னரும் தீர்வில்லையெனில் புதன் கிழமை முதல் பிரதேச செயலகத்தை முடக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக மீனவர்கள் எச்சரித்திருந்தனர்.
இதனிடையே ஏ.சுமந்திரன் இன்றைய போராட்டத்தை முடக்கவே அங்குவருகை தந்திருந்ததாக மீனவ அமைப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

சந்திப்பின் பின்னர் தென்னிலங்கை மீனவர்களை அங்கிருந்த வெளியேறுமாறு கே.சிவாஜிலிங்கம் தலைமையில் சென்ற மீனவர்கள் கோரியபோதே அனைவரையும் தீவைத்து கொழுத்தப்போவதாக ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த தென்னிலங்கை மீனவர்கள் மிரட்டியதாக வடமாகாண கடற்றொழில் மீனவ சம்மேளனத்தலைவர் வே.தவச்செல்வம் பதிவு இணையத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை வழமை போல சுமந்திரனின் சொம்புகள் கடற்றொழில் திணைக்களத்தை முடக்க அவர் எச்சரிக்கை விடுத்திருப்பதாக செய்திகளை பரப்புவது போராடும் மக்களை முடக்கும் சதியேயென வடமராட்சி கிழக்கு மீனவ சங்கப்பிரதிநிதிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.   

No comments