Header Shelvazug

http://shelvazug.com/

பனங்காட்டான் எழுதிய ''அரசியலில் நேர்மையான கள்வரை எவ்வாறு எப்படி இனம் காணலாம்?''

2004ம் ஆண்டு ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக குமாரதுங்க பிரதமர் ரணில் அரசைத் திடீரெனக் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தியது போன்ற ஒரு சூழல், தற்போது மைத்திரி – ரணில் பனிப்போர் காரணமாக உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம்.  

இலங்கை அரசியலில் எதுவும் எப்போதும் எப்படியும் நடக்கலாமென்பது சும்மா கதையல்ல.

நடக்கும் என்பது நடக்காமல் போவதும், நடக்காது என்பது நடந்து விடுவதும் இலங்கை அரசியலில் சதுரங்க விளையாட்டுப் போன்றது.

இதனை ஒட்டியதான சில சம்பவங்களை இங்கு பார்ப்போம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியீடு கடந்த வார இறுதியில் யாழ்நகரில் இடம்பெற்றது.

இங்கிலாந்திலுள்ள தமிழரசுக்கட்சிக் கிளையின் தலைவர் இரத்தினசிங்கம் இந்நூலை அச்சேற்றியிருந்தார்.

முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.

சுமார் ஒன்றரை வருடத்தின் பின்னர் இரண்டு தலைவர்களும் யாழ்நகரில் ஒரே மேடையில் அருகருகே இருந்து உரையாற்றிய கூட்டம் இது.

தங்கள் தலைவரின் பிரசன்னம் காரணமாக கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா சிறிது நேரம் இருந்துவிட்டுப் போய்விட்டார்.

கிளிநொச்சி சிறிதரன் ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரே~; பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாணசபை அக்கிராசனர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் சமூகம் கொடுக்காத முக்கிய பிரமுகர்கள்.

விக்னேஸ்வரனும் சம்பந்தனும் ஒன்றாக அமர்ந்திருந்ததால் அவர்களிடையே இதுவரை நிலவி வந்த இழுபறி தீர்ந்துவிட்டதாக பலரும் எண்ணிக் கொண்டனர். ஆனால் அப்படியெதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

இருவரது உரைகளும் ஒன்றையொன்று முட்டுப்படாது, எங்கும் பிடிபடாது அமைந்திருந்தது. மொத்தத்தில் இருவரும் ஷஎன்வழி நல்வழி| என்ற பாணியில் உரையாற்றி மக்களைக் குழப்பிவிட்டதுதான் மிச்சம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கலாமென்றும் சிலர் ஆருடம் கூறி வருகின்றனர்.

இந்த வருட இறுதியில் எல்லாம் வெளிச்சமாகிவிடும்.

இன்னும் ஒரு வருடத்தின் பின்னர் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பேச்சே தெற்கில் இப்போது மும்முரம். மகிந்தவின் சகோதரர்களான சமல், பசில், கோதபாய ஆகிய மூவரில் யார் எதிரணி சார்பில் போட்டியிடுவார் என்ற உள்வீட்டுப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. 

முதலில் பிரதமர் பதவியைக் கைப்பற்றி பின்னர் உட்கதவால் ஜனாதிபதிக் கதிரைக்குத் தாவலாம் என்ற சட்ட ஓட்டையைக் கையிலெடுத்துள்ள மகிந்த, பொம்மை ஜனாதிபதிப் பதவிக்கு ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

மறுபுறத்தில், சுதந்திரக் கட்சி வேட்பாளராக மைத்திரியும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணிலும் போட்டியிடுவரென அந்தந்தக் கட்சியின் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இப்போதுள்ள கட்சி நிலைவரத்தைப் பார்க்கின் ரணிலுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உண்டு.

கூட்டமைப்பின் ஊடாக தமிழர் வாக்குகளைத் தம்வசப்படுத்தும் சாதக நிலையை சூட்சுமமாக ரணில் ஆரம்பித்துவிட்டார்.

இந்த மாதம் 27ம் திகதி கொழும்பில் கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலருடன் மூன்று மணித்தியாலங்கள் ஆலோசனை நடத்திய ரணில், வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஒப்பேற்ற தமது கல்லாப் பெட்டியை அகலத் திறந்துள்ளார்.

இவரது நீளமான வாக்குறுதிப் பட்டியலைக் கண்டு கூட்டமைப்பினரே அதிர்ச்சியடைந்து விட்டார்களாம்.

பலாலியிலுள்ள உள்நாட்டு விமான நிலையத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த உறுதியளித்துள்ளார்.

இதற்காக, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்துவுடன் அடுத்த மாதம் 10ம் திகதி ரணில் பலாலிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்தை சுமார் 20 கோடி ரூபா செலவில் ஆழமாக்கி நவீனமயப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளார். நோர்வே அரசின் நிதியுதவி இதற்குக் கிடைத்துள்ளது. (ஒன்பதாண்டுகளின் பின்னர் நோர்வே மீண்டும் யாழ்ப்பாணத்தில் கால் புதைக்க எடுக்கும் முதல் செயற்பாடு இது)

யுத்த காலத்தில் அழிந்துபோன யாழ்ப்பாணம் மாநகரசபை கட்டிடத்தை, சுப்பிரமணியம் பூங்கா முன்னாலுள்ள அதே காணியில் மீளக்கட்டவும் ரணில் நிதியுதவிக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

காங்கேசன்துறையிலும், பரந்தனிலும் கைத்தொழில் பூங்காக்களை அமைக்கப் போவதாகவும் ரணில் அறிவித்துள்ளார். தெற்கிலுள்ள முக்கிய கைத்தொழில் நிறுவனங்களை இதில் இணைத்துக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். (இங்கு கடமையாற்ற ஒரு தொகை சிங்களவர் இறக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம்?)

செம்மணியில் 273 ஏக்கர் பரப்பில் மாதிரி நகரமொன்றை அமைக்கவும் ரணில் முன்வந்துள்ளார். யாழ். மாநகர நுழைவாயிலாக விளங்கும் செம்மணி, சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் கொலைக்களமாக இருந்த இடம்.

கிரி~hந்தி என்ற மாணவியை இராணுவம் படுகொலை செய்ததும், இதனையடுத்து சந்திரிகா குமாரதுங்க ஷசெம்மணி புகழ் அம்மணி| என்று பட்டம் சூட்டப்பட்டதும் பழங்கதையன்று.

அருகிலுள்ள நாவற்குழியில் சிங்களக் கிராமத்தை இராணுவம் அமைத்துள்ள நிலையில், செம்மணியில் அமைக்கப்படும் மாதிரி நகரம் நாவற்குழியின் பாதுகாப்பு அரணாக அமையக்கூடும். பொறுத்திருந்து பார்ப்போம்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, பலாலி ஆகிய இடங்களிலுள்ள பொதுமக்களின் பல நூறு ஏக்கர் காணிகளை அதன் சொந்தக்காரர்களிடம் மீளக் கையளிக்கவும் ரணில் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஷஉன்னிடம் தந்தேன் சம்மதம்| என்ற சினிமாப் பாட்டு பாணியில் கூட்டமைப்புக் குழுவினரிடம் பிரதமர் ரணில் எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்து உடன்பாடு காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடமா அல்லது பிரதமரிடமா என்ற சந்தேகத்தை ஏற்டுத்தும் வகையில் பிரமரின் இந்தச் செயற்பாடு அமைந்துள்ளது.

2004ம் ஆண்டில் ஜனாதிபதியாகவிருந்த சந்திரிகா, அப்போது பிரதமராகவிருந்த ரணிலின் அரசாங்கத்தை திடுதிப்பெனக் கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிட்டார்.

விடுதலைப் புலிகளுடன் இடைக்கால சுயநிர்ணய ஆட்சியமைப்பை உருவாக்க பிரதமர் ரணில் இணங்கியதே இதற்குக் காரணமாக அமைந்தது.

இப்போது ஜனாதிபதிக்கோ அமைச்சரவைக்கோ தெரியாது வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரணில் சம்மதம் தெரிவித்திருப்பது, அடுத்த வருட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுவதற்காகவே என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை.

இப்போதுள்ள வங்குரோத்து நிலையில் இந்த வாக்குறுதிகளை எவ்வாறு ரணில் நிறைவேற்றப் போகிறார்?

சிலவேளை எல்லாத் திட்டங்களுக்கும் தமது பெயருடன் கூட்டமைப்பினரின் பெயர்களையும் சேர்த்து நினைவுக் கல்லில் பதித்துவிட்டு, தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால் இவைகளைத் தான் நிறைவேற்றுவேன் என்று அவர் கூறுவாராயின், அதுதான் அரசியல்.

அதற்கு முன்னர் ரணிலைப் பதவி நீக்கி, அரசாங்கத்தைக் கலைத்து, சில மாதங்களுக்குத் தேர்தலை இழுத்தடிக்கவும் மைத்திரியால் முடியும். இதுவும் அரசியல்தான்.

சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு ஆங்கிலத் தினசரி ஒன்றுக்கு செவ்வி வழங்கிய மகிந்த ராஜபக்ச ஒரு ரகசியத்தைப் பகிரங்கப்படுத்தினார்.

இவ்வருட முற்பகுதியில் ரணில் மீது மைத்திரியின் சுதந்திரக் கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானவேளையில், ஜனாதிபதி மைத்திரி தம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரணிலைப் பதவி நீக்க நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு கேட்டதாக மகிந்த தெரிவித்திருந்தார்.

இது உண்மையாயின், திரைக்குப் பின்னால் மைத்திரியும் மகிந்தவும் கூட்டுச் சேர்ந்து இயங்குகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஊழல்களும் கொள்ளைகளும் தாராளமாகப் புரிந்த மகிந்தவும் அவரது குழுவினரும் சுதந்திரமாக நடமாடுவதற்கு இந்தக் திரைக்குப் பின்னாலான கூட்டே காரணமாக இருக்கலாம்.

ரணிலுக்கு மகிந்த விடுத்துள்ள சற்று வித்தியாசமான ஒரு சவாலை இங்கு பார்ப்போம்.

தன்னால் தனது உறவினரான முன்னாள் ர~;ய நாட்டுத் தூதுவர் உதயங்கவை நாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்று கூறியுள்ள மகிந்த, சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை ரணில் நாட்டுக்குள் கொண்டு வருவாரா என்பதே மகிந்தவின் சவால்.

நேர்மையான கள்வன் நீயா நானா என்பது போன்றது மகிந்தவின் சவால்.

அரசியலில் இது இப்படித்தான் இருக்கும்போலும்!No comments