சத்தியத்தின் படியேறுகிறார் சத்தியலிங்கம்!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை சிலர் தங்களது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தவறாக வழிநடாத்தியுள்ளனர்.


அவர்களின் தவறான வழிநடாத்தல் காரணமாகவே நான் குற்றமற்றவன் என்று தெரிந்திருந்தும் என்னை மாகாண சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அழுத்தம் கொடுத்ததாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக மீண்டும் தன்னை புனிதனாக காண்பிக்க சத்தியலிங்கம் ஆலாய் பறந்து திரிகின்றார்.

அவ்வகையில் ஏற்கனவே வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சகிதம் இத்தகைய பிரச்சாரங்களை ஆரம்பித்த போதும் அது வெற்றிபெற்றிருக்கவில்லை.

மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு உள்ளிட்டவற்றில் தனது சகோதரன் சகிதம் மோசடியில் ஈடுபட்டமை,தன்னிச்சையாக இலங்கை அரசிற்கு முண்டுகொடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களினை உடைக்க பங்கெடுத்தமையென பல குற்றச்சாட்டுக்கள் சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் வடமாகாணசபையின் ஆயுள் அண்மிக்கின்ற நிலையில் பழைய தோம்புகளை தோண்டியெடுக்க முதலமைச்சர் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் தன்னை புனிதனாக்க சத்தியலிங்கம் தற்போது முனைப்புகாட்டிவருகின்றார்.

இதனிடையே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றவகையில் அவர்களின் தேவைகள் நீண்டவை. ஆனாலும் மாகாண சபையால் கடந்த 5 வருடங்களில் அத்தனை தேவைகளையும்; செய்துவிடமுடியவில்லை என்பது உண்மை. ஆனாலும் எனது பதவிக்காலத்தில் மாகாணத்தின் சுகாதார துறை பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளதை கண்கூடாக பார்க்கலாமென கட்சி ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

No comments