ரவிராஜ் கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் 2ஆம் நாள் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் மாதம் 2ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2006 நெவம்பர் 10ஆம் நாள் நடந்த இந்தப் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையினர் 5 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்டஜூரிகள் சபை , குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக ரவிராஜ் குடும்பத்தினரால் செய்யப்பட்ட மேன்முறையீடு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே வழக்கு விசாரணை ஓகஸ்ட் 2ஆம் நாள் ஆரம்பிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments