தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை நிராகரித்தார் விக்னேஸ்வரன்?


சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், வடக்கு மாகாண மக்களுக்கு பணியாற்றவே தாம் விரும்புவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு அவர் கூறியிருக்கிறார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை வழங்க கூட்டமைப்பு தலைமை விருப்பம் வெளியிட்டதாக கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி எந்த அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments