பொன்.சிவகுமாரனை காப்பாற்றுவோம்!


எந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவை கொலை செய்ய முயன்று வீரச்சாவை அடைந்தாரோ அதே கட்சியின் ஆதரவினல் கதிரைகளில் ஒட்டிக்கொண்டுள்ள கும்பல் நினைவேந்தல் நடத்தும் பரிதாபநிலையை அடைந்துள்ளார் தியாகி பொன்.சிவகுமாரன்.

எதிர்வரும் யூன் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவு தினத்தையொட்டிய முன்னேற்பாடாக உரும்பிராயில் அமைந்துள்ள அவரின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நேற்றைய தினம் சிரமதானம் நடைபெற்றது.

 சிரமதானத்தில் முன்னின்றவர்களில் கடந்த காலங்களில் இராணுவபுலனாய்வு பிரிவினருடன் இணைந்து பல்கலைக்கழக மாணவ தலைவர்களை காட்டிக்கொடுத்த செந்தூரன் என்பவர் முக்கியஸ்தர் ஒருவராவார்.

மற்றைய நபர் முன்னாள் மனித உரிமை செயற்பாட்டளர் ஆவார்.போராட்டங்களில் தனது புகைப்படங்களை வரச்செய்வதில் முன்னின்று செயற்பட்ட தியாகராசா நிரோஸ் எனும் குறித்த நபர் தற்போது வலிகிழக்கு பிரதேசசபையின் ஓராண்டிற்கான தவிசாளராவார்.எந்த பெரும்பான்மையின கட்சிக்கு எதிராக பொன் சிவகுமாரன் போராடினாரோ தற்போது அவரை விற்பனை செய்ய முன்னிற்பவராக அவரேயுள்ளார்.

மற்றையவரான ஈபிடிபி தவராசா தற்போது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண போராடிவருகின்ற ஒருவராவார். 

இத்தகையவர்கள் சிவகுமாரனிற்கு அஞ்சலி செலுத்த முற்படுவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைகளினில் எடுத்துக்கொண்டதனை நியாயப்படுத்துவதாகவே பார்க்கப்படுகின்றது.

No comments