பேஸ்புக் தகவல்களைத் திருடிய கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவம் மூடப்படுகிறது!

கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களை திருடி தனது வாடிக்கையாளர்களுக்கு விவரங்களை கொடுத்தது தெரியவந்தது. முதலில் 5 கோடி பேர் தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்துடன் உள்ள உறவை ஃபேஸ்புக் முறித்து கொண்டது.

இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் சுமார் 8 கோடியே 70 லட்சம் பேருடைய தகவல்களை திருடி இருப்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அறிவித்தது.

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனால்டிகா தனது செயல்பாட்டை நிறுத்துகொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அந்நிறுவனம் கைதூக்க  மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

No comments