தமிழின அழிப்பை நாளை முன்னிட்டு பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு

வலி சுமந்த வாரத்தில் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. இக் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் மீது சிங்கள அரசால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற நடைபெறுகின்ற இனப்படுகொலைகளை ஆதாரபூர்வமாக காட்சிப்படுத்தி யேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளது. அத்தோடு இக் கண்காட்சியில் கலந்துகொண்ட தமிழ் இளையோர் அமைப்பினர் வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து உரையாடல்களில் ஈடுபட்டனர்.

இக் கவனயீர்ப்பு கண்காட்சி தொடர்ச்சியாக ஏனைய நகரங்களிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் காலை 10 மணிக்கு ஹம்பூர்க் நகரத்திலும் மாலை 16 மணிக்கு கண்ணோவர் நகரத்திலும் நடைபெறவுள்ளது.

No comments