லண்டனில் அணில் அகர்வாலின் வீடு முற்றுகை!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து லண்டனில் உள்ள உரிமையாளர் வீட்டில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் வீடு அமைந்துள்ளது. தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அனில் அகர்வால் வீட்டின் முன்பு திரண்டனர். அங்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.




No comments