சிவராம் கொலை:விசாரணைக்கு சுமந்திரன் ஆதரவு!


ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் தொடர்புடைய புளொட் அமைப்பினை விசாரிக்கவேண்டுமெனவும் குற்றவாளிகளை அடையாளம் காணவேண்டுமெனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடாத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.சிலருக்கு கொல்லப்பட்ட சில ஊடகவியலாளரின் கொலைகள் பற்றி விசாரிக்க விருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் இப்போது எங்களுடன் தானே இருக்கின்றார்கள் எனும் ஆதங்கம் உண்டு.எங்களுடன் நின்றால் என்ன, எழுக தமிழுடன் நின்றால் என்ன, உண்மை கண்டறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் 2, 3 தடவைகள் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்னர் என்னைப் பற்றி அவதூறாக எழுகின்றார் எனவும் இனி எழுதக்கூடாது என நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பெற்றிருந்தார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் தொடர்புடைய புளொட் அமைப்பினை விசாரிக்கவேண்டுமென்ற எம்.ஏ.சுமந்திரனின் கருத்திற்கு ஊடக அமைப்புக்கள் வரவேற்பை வெளியிட்டுள்ளன.

No comments