வடகொரியாவிலிருந்து 3 அமொிக்க கைதிகளை மீட்டார் அமொிக்க வெளியுறவு அமைச்சர்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்ப்பியோ அறிவிக்கப்படாத திடீர் பயணமாக இன்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் சென்றார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை டிரம்ப் சந்தித்துப் பேசப்போகும் இடம் மற்றும் தேதி இந்த சந்திப்பின்போது உறுதிசெய்யப்பட்டது. மேலும், வடகொரியா கைது செய்துள்ள மூன்று அமெரிக்கர்களை விடுவிப்பது தொடர்பாகவும் மைக் பாம்ப்பியோ பேச்சுவார்த்தை நடத்தினார்.


இதன் தொடர்ச்சியாக, அந்த மூன்று அமெரிக்கர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடன் மைக் பாம்ப்பியோ வாஷிங்டன் நகருக்கு புறப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த தகவலால் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வாஷிங்டன் நகரில் உள்ள ஆண்டுரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்துசேரும் மைக் பாம்ப்பியோவை நேரில் சென்று வரவேற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments