சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் 40 ஆயிரத்து 17 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணி தொடக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலகள் இந்த அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments