தமிழின அழிப்பு நாளான மே 18இல் யாழ் நூலகத்தில் பயிற்சிப்பட்டறை


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று யாழ்.கல்வித்திணைக்களத்தின் பங்களிப்புடன் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை பொதுநூலக கட்டடத்தொகுதியில் பயிற்சிப்பட்டறை நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 18ம் திகதி யாழ்.பொதுநூலகத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சிப்பட்டறையின் நோக்கம் மாணவர்களிiடையேயான வாசிப்பு பழக்கம் தொடர்பான தகவல்களை திரட்டுவதிலும் ஆய்வு செய்வதுமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய பயிற்ச்சிப்பட்டறை தமிழ் மொழி மூலமான நூல் வெளியீடுகள் தொடர்பாக நடைபெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இப்பயிற்சிப்பட்டறையில்  தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் உதவிப்பணிப்பாளர் அனோமா விஜேசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு அன்று தேசிய துக்கதினம் முன்னெடுக்க வடமாகாணசபை அறிவிப்பு விடுத்திருக்க மறுபுறம் தெற்கிலிருந்து வருகை தந்து பயிற்சிப்பட்டறை நடக்க ஏற்பாடுகளில் கல்வி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளமை விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

No comments