வடக்கிற்கு தமிழ் ஆளுநர் நியமனத்தை தடுத்த மகாநாயக்கர்கள்!


வடக்கு மாகா­ணத்­துக்கு தமி­ழரை ஆளு­ந­ராக நிய­மிக்­கக்­கூ­டாது என்று மகா­நா­யக்க தேரர்­கள் சிலர் கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். அத னா­லேயே வடக்கு மாகாண ஆளு­ந­ராக தமி­ழர் நிய­மிக்­கப்­ப­டவில்லை. ரெஜி னோல்ட் குரே மீண்­டும் வடக்­கு ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டார் என்று கூறப்படுகிறது.

வடக்கு தவிர்ந்த ஏனைய மாகா­ணங்­க­ளுக்­கான புதிய ஆளு­நர்­கள் கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி­ மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லை­யில் பதவியேற்ற­னர். ஏற்­க­னவே ஆளு­நர்­க­ளாக இருந்­த­வர்­க­ளுக்கே இந்த இட­மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டன.

இதற்­க­மைய, வடக்கு மாகாண ஆளு­ந­ராக இருந்த ரெஜி­னோல்ட் குரேவை மத்­திய மாகா­ணத்­துக்கு மாற்­றி­விட்டு மேல் மாகாண ஆளு­ந­ராக இருந்த கே.சி.லோகேஸ்­வ­ரனை வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிப்­பதே ஜனாதிபதியின் முன்­னைய திட்­ட­மாக இருந்­தது. எனி­னும், வடக்­கில் தமி­ழர் ஒரு­வர் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் நிலை­யில், அந்­தப் பகு­திக்கு தமிழ் ஆளு­நர் ஒரு­வரை நிய­மித்­தால் அது ஏதே­னும் பாத­க­மாக அமைந்­து­வி­டும் என்­றும், அத­னால் சிங்­க­ள­வ­ரொ­ரு­வரை ஆளு­ந­ராக நிய­மிக்­கு­மா­றும் மகா­நா­யக்க தேரர்­கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். இதன் கார­ண­மா­கவே ஜனாதிபதி தனது முடிவை இறு­தி­நே­ரத்­தில் மாற்றி, லோகேஸ்­வ­ரனை வட­மேல் மாகாண ஆளு­ந­ராக நிய­மித்­தார். வடக்­குக்கு வேறொ­ரு­வரை நிய­மித்­தால் நெருக்­கடி வரும் என்­ப­தால் ரெஜி­னோல்ட் குரே வுக்கு ஆளு­நர் பதவி மீண்­டும் வழங்­கப்­பட்­டது என­வும் அறி­ய­மு­டி­கின்­றது. ஆளு­நர் குரே வடக்கு மாகாண ஆளு­ந­ராக மீண்­டும் கட­மை­க­ளை­யேற்­றுள்­ளார்.

No comments