அலைசறுக்கு வீரரை சுறா கடித்தது! உலக அலைசறுக்குப் போட்டிகள் ஒத்திவைப்பு!

ஆஸ்திரேலியாவில் உலக அலைச்சறுக்கு லீக் போட்டிகள் நடைபெறவிருக்கும் வேளை அலைசறுக்கு வீரர் ஒருவர் சுறா மீனால் கடியுண்டதையடுத்து போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று திங்கட்கிழமை கிரேஸ் டவுன் பகுதியில் உள்ள கடற்கரையில் அலைச்சறுக்கு வீரர் ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொருந்த வேளை அங்கு திடீரென வந்த சுறா மீனிடம் கடியுண்டு மாட்டிக்கொண்டார்.

எனினும் சமயோசிதமாக மீனிடம் இருந்து தப்பித்த அலைசறுக்கு வீரர் காலில் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிற்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இச்சம்பவத்தையடுத்து வீரர்களின் பாதுகாப்புக் கருத்திற்கொண்டு அலைசறுக்கு போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என உலக அலைசறுக்கு லீக் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு குறித்து சோதனை செய்த பின்னர் போட்டிகளுக்கான நாட்கள் அறிவிக்கப்படும் என லீக் மேலும் அறிவித்துள்ளது.

No comments