அமைச்சர் காமினி ஜெயவிக்கிரமவுக்கு இந்திய ஆலயத்தில் நேர்ந்த சோதனை!


பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம், காமினி ஜெயவிக்கிரம பெரேரா இந்தியா சென்றிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காமினி ஜெயவிக்கிரம பெரேரா இந்து அல்ல என்பதாலேயே அவர் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தாம் ஒரு பக்தியுள்ள பௌத்தர் என்று அவர் கூறிய போதிலும், ஆலய நிர்வாகிகள் அவரை அனுமதிக்கவில்லை. புவனேஸ்வரில் உள்ள கலிங்க அனைத்துலக நிறுவகத்தில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய காமினி ஜெயவிக்கிரம பெரேரா தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, கலிங்க அனைத்துலக நிறுவகத்தின் நிறுவக தலைவரான முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் லலித் மான்சிங், இந்தச் சம்பவத்துக்காக தமது மாநிலத்தின் சார்பில் மன்னிப்புக் கோரினார்.

No comments