ஐநாவில் அமொிக்காவுக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி!

சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் நேற்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றினார்.

சிரியா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், மேற்கொண்டு சிரியாவில் தாக்குதல் நடத்த கூடாது என ரஷியா கொண்டுவந்த தீர்மானத்துக்கு சீனா மற்றும் பொலிவியா ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், குவைத், போலாந்து, ஐவரி கோஸ்ட் ஆகிய எட்டு நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். எத்தியோப்பியா, கஜகஸ்தான், எக்குவட்டோரியல் கினியா, பெரு ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.

இதனால் அமெரிக்காவுக்கு எதிராக ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

No comments